வியாழன், 14 மார்ச், 2024

தவக்காலம் 4ம் வாரம், வெள்ளி - 15.03.2024



தவக்காலம் 4ம் வாரம், வெள்ளி - 15.03.2024


சாலமோனின் ஞானம் 2:1.12-22 - இழிவான சாவிற்கு அவர்களை தீர்ப்பிடுவோம்

திருப்பாடல் 34 - நீதிமான்கள் மன்றாடும் போது ஆண்டவர் செவிசாய்கின்றார்.

யோவான் 7:1-2.10.25-30 - இயேசுவை பிடிக்க தீயவர்களால் முடியாது


நீதிமான் வாழ்க்கை ஒரு கிறிஸ்தவ அழைப்பு. பெயரும், ஊரும், சந்ததியும் தெரியாத ஒரு மனிதர் ஆபிராம், அவரை கடவுள் ஆபிரகாமாக மாற்றியது, அவர் நீதிமான் வாழ்வை வாழவேண்டும் என்பதற்காகவும், அவர் சந்ததி அதனை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவுமே. ஆபிரகாம் நீதிமான் என்பதால் கடவுள் அவரை, தெரியவில்லை, மாறாக, ஆபிராம் அழைக்கப்பட்டு, ஆபிரகாமாக மாறியதாலே, அவர் நீதிமானானார். முழு இஸ்ராயேல் குலமுமே நீதிமான் வாழ்விற்கு அழைக்கப்பட்டது, அதைத்தான் இன்னும் நெருக்கமாக கிறிஸ்தவும் செய்ய கேட்கப்படுகிறது. கிறிஸ்தவம் ஒரு நீதிமான் கூட்டம், அதன் கடவுள் நீதிமான், அதன் தாயும், வளர்ப்புத் தந்தையும் நீதிமான்கள். அதன் நடத்துனர் ஒரு நீதிமான், அதன் மீட்பர் நீதிமான்களுக்கெல்லாம் நீதிமான்

நீதிமான் என்றால் என்ன? நீதிமானைக் குறிக்க சாதிக் צַדִּ֛יק என்ற சொல்லை முதல் ஏற்பாடு பயன்படுத்துகிறது. இதனை திக்கையோஸ் δίκαιος என புதிய ஏற்பாடு குறிக்கிறது. நீதிமான்கள் யார் என்பதை திருப்பாடல் 1 அழகாக காட்டுகிறது. நீதிமான்களை கடவுள் எப்படிக் காக்கின்றார் என்பதை இன்றைய திருப்பாடல் 35 அழகாகக் காட்டுகிறது. நீதிமான்கள் மறு கிறிஸ்துக்கள், அவர்கள் வெறும் கிறிஸ்தவத்தை அல்ல, மாறாக கிறிஸ்துவைக் கொண்டவர்கள், அதற்காகத்தான் கிறிஸ்தவத்தைவை பயன்படுத்துகிறவர்கள். நீதிமான்கள் வாழ்கை சமயம், சம்பிரதாயங்கள், சடங்குகளை கடந்து, ஆன்மீகவும், அறமும் நிறைந்தது. பல தியாகங்களை அது எதிர்பார்க்கிறது. சட்டங்களுக்கு உயர்ந்தது. நீதிமான்கள் கடவுளைக் காக்கிறவர்கள் அல்ல, கடவுளால் காக்கப்படுகிறவர்கள், கடவுளை திருப்திப்படுத்த, மனிதத்தையும், இயற்கையையும் பாதுகாக்கிறவர்கள்

இன்று நீதீமான்கள் குறைவு, ஆனால் அனைவரும் நீதிபதிகளாக மாற முயச்சி செய்கிறார்கள். தீயவர்களைக் கூட, நல்ல நீதிபதிகளால் காப்பாற்ற முடியாமற் போகும், காரணம் பிழையான அரசியல் அமைப்பு முறைகள். புணத்திற்காக அநீதிகளை சமரசம் செய்யும், வழக்கறிஞர் குழாமும் உண்டு. ஆனால் கடவுளின் நீதி, வழக்கறிஞர்களில் அறிவில் தங்காது, அது அவரிலே மட்டும்தான் தங்கும். நாம் யார், கடவுளின் நீதிமான்களா? நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். - 'உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். - நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல் அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். - அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. - ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார்.'



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...