புதன், 13 மார்ச், 2024

தவக்காலம் 4ம் வாரம், வியாழன் - 14.03.2024


தவக்காலம் 4ம் வாரம், வியாழன் - 14.03.2024


விடுதலைப் பயணம் 32:7-14 - உம் மக்களுக்கு தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்

திருப்பாடல் 106 - மோசே உடைமதில் காவலர் போல் நின்றார்

யோவான் 5:31-47 - மோசேயே உங்கள் மேல் குற்றம் சுமத்துவார்


முதல் ஏற்பாட்டில், அசைக்க முடியாத, நிவர்த்தி செய்ய முடியாத ஆளுமை, மாமனிதர் மோசே. מֹשֶׁה Μωϋσῆς மோசேயின் விசுவாச பிள்ளைகள் நாம் என்பதில் பெறுமை கொள்வதில் ஒரு திருப்பதி. தவக்காலத்தில் மோசேயைப் பற்றி சிந்திப்பது சாலப் பொருந்தும். மோசே கைவிடப்பட்டவர், தண்ணீரிலிருந்து எடுக்கப்படவர், ஆனால் அவர் யாரையும் கைவிட வில்லை, தண்ணீரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். மோசேயிடம் இருந்து பலவற்றைக் கற்றுக்கொள்ளலாம். மோசே தன் கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார், முதல் ஏற்பாட்டில் கடவுளின் நண்பர் என அழைக்கப்பட்டவர் மோசே மட்டும்தான். பாரவோனின் கொடுமைகளை எதிர்த்தார் மோசே, ஆனால் பாரவோனின் குடும்பத்தை வெறுத்தார் என சொல்வதற்கில்லை

இஸ்ராயேல் மக்களை, கடவுளுக்கு பின்னர், அதிகமாக நேசித்தவர் மோசே. இந்த மக்கள் சில வேளைகளில் கடவுளை வெறுத்தார்கள், மோசேiயும் சேர்த்தே வெறுத்தார்கள். நாற்பது வருட பாலைவன அனுபவம், மோசேக்கானது அல்ல, அது இஸ்ராயேல் மக்களுக்கானது. பாரவோனிடமிருந்து தப்பி வந்த மோசேக்கு பாலைவனத்தில் குறுக்கான பாதைகள் பல தெரிந்திருக்கும், இருந்தாலும் அவர் மக்களை சீனாய் மலையடியை சுற்றிவந்த பின்னரே காணான் தேசத்திற்குள் நுழையவிட்டார்அவர் அதற்கான வாய்ப்பை தனக்கு ஏற்படுத்தவில்லை, அவர் பிள்ளைகள், மனைவியும் காணானுக்குள் நுழையவில்லை, அவர் சந்ததி நுழைந்திருக்கும். மோசேயை ஒரு சிலரே தங்கள் சொந்த நோக்கத்திற்காக வெறுத்தார்கள், ஆனால் அதிகமானவர்கள் அவருடைய பெறுமதியை உணர்ந்துகொண்டார்கள்

மோசே கடவுளை எப்படி அன்பு செய்தாரோ அதேபோல, யோசுவா மோசேயை அன்பு செய்தார், மோசேயின் அன்பு மனைவியைப் பற்றி அதிகமாக தெரியாது, மோசேயின் பிள்ளைகள் தோறாவில் முக்கியம் பெறவில்லை. ஒருவேளை மோசே இவர்களை மௌமாக்கியிருக்கலாம், அல்லது விவிலிய ஆசிரியர்கள் அவர்களை குறிப்பிடாமல் இருந்திருக்கலாம். மோசே தன் குடும்பத்தை முன்னிலைப்படுத்தாத, ஒரு மாபெரும் தலைவர். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்கள் எபிரேய மொழி பேசினார்களா என்பது தெளிவில்லை, ஆனால் மோசேயின் காலத்தில், எபிரேயம் அவர்களின் மொழியாக வளர்ந்திருந்தது. ஆக மோசேயை எபிரேயர்களின் தந்தை என சொல்வதில் தப்பில்லை. இயேசு ஆண்டவருக்கு மிக மிடித்த முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர் மோசே. மத்தேயு நற்செய்தியாளர், இயேசுவை இன்னொரு மோசே எனக் காட்டும் அளவிற்கு மோசே மிக மிக முக்கியமானவர். கிறஸ்தவ சமூகம் மோசேயின் ஆளுமையிலிருந்து எதைக் கற்றுக்கொள்கிறது? 'பாலைநிலத்தில் மோயோல் பாம்பு உயர்த்தப்பட்டது போல, நம் வாழ்விலும் இயேசு உயர்த்தப்பட வேண்டும்'. 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...