எசாயா 14:1-9 - இஸ்ராயேலே உன் கடவுளிடம் திரும்பி வா
திருப்பாடல் 81:5-16 - என் மக்களே எனக்குச் செவிகொடுங்கள்
மாற்கு 12:28-34 - நீர் இறையாட்சிக்கு தொலையில் இல்லை
இஸ்ராயேலின் அடையாளம் என்ன? விருத்தசேதனமா, இஸ்ராயேல் நாடா, எபிரேய மொழியா, ஆபிரகாமா அல்லது தாவீது அரசரா? அல்லது எருசலேமா அல்லது அதில் இருந்த எருசலேம் தேவாலயமா? இல்லவே இல்லை, இஸ்ராயேலின் அடையாளம் 'கடவுளாகிய ஆண்டவர்'.
இஸ்ராயேலே கேள் உன் கடவுளாகிய ஆண்டவரே, ஒரே கடவுள்'. ஷேமா இஸ்ராயேல், அதோனாய் எலோகேனூ அதானாய் எகாத் שְׁמַ֖ע יִשְׂרָאֵ֑ל יְהוָ֥ה אֱלֹהֵ֖ינוּ יְהוָ֥ה ׀ אֶחָֽד׃-
இதுதான் அவர்களின் வரைவிலக்கனம். இந்த வரைவிலக்கனம் மாறுகின்றபோது, கடவுளுடைய இடத்தில் வேறு ஆட்கள், இடங்கள், பொருட்கள் வருகின்றபோதுதான் பிரச்சனை வருகின்றது. இஸ்ராயேலில் எல்லாம் அழியக்கூடியவை அல்லது மாறாக்கூடியவை, ஆனால் அவர்களின் கடவுள் மாறாதவர், அழியாதவர். ஆகவே அவரை இறுக்கமாக பற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனும், தேவையான ஒன்றாகவும் இருக்கிறது. இதற்கு இஸ்ராயேல் ஆயத்தமாக இருந்தாதா, இருக்கிறதா என்பதுதான் கேள்வி.
இதனைத்தான் கிறிஸ்தவமும் கற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்தவத்தின் அடையாளம் என்ன? எருசலேமா, பெத்லகேமா? நாசரேத்தா? வத்திக்கானா? கிறிஸ்தவ நெறியா, அன்னை மரியாவா? புனிதர்கள் கூட்டமா? விவிலியமாக? வழிபாடுகளா? திருப்பலியா? இவையனைத்தும் தேவையானவை, இதில் சில மிக மிக முக்கியமானவை மற்றும் தவிர்க்கப்பட முடியாதவை. ஆனால், கிறிஸ்தவத்தின் அடையாளம் இயேசு மட்டுமே, இயேசு இல்லாமல் இவையனைத்தும், முழுமையில்லாதவையாகா மாறிவிடும், சிலவேளைகளில் ஆபத்தானவையாகவும் மாறிவிடலாம், அர்த்தமில்லாமல் பயன்படுத்ப்பட்டால்.
ஆனால், இவையனைத்தையும் பயன்படுத்தி, இயேசுவை இறுக்கமாக பற்றிக்கொள்வதுதான் கெட்டித்தனம். 'உன் கடவுளாகிய ஆண்டவர் நானே, என் மக்களே எனக்கு செவிகொடுங்கள்' என்ற திருப்பாடல் வரி நம் வாழ்வின் அடையாளமாகட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக