வெள்ளி, 1 மார்ச், 2024

16. தவக்காலம், இரண்டாம் வாரம், சனி - 02.03.2024 'ஆண்டவர் அருளும் இரக்கமும் கொண்டவர்'


 மீக்கா 7:14-20 - ஆண்டவர் பேரன்பைக் காட்டுவார்

திருப்பாடல் 103 - கடவுளின் பேரன்பு விண்ணுலகு போன்று உயர்ந்தது

லூக்கா 15 - ஊதாரி தந்தையும், ஊதாரி மகனும்



இந்த உலகு அன்பு என்ற பெயரில் வன்முறை செய்கிறது. காதலுக்கும், காமத்திற்கும், கோர்மோன் விளைவுகளுக்கும், வித்தியாசத்தை காணாத சமூகத்தில் வாழ்கிறோம். காதல் என்ற சொல்லால், வன்முறைகள்தான் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. பெண்பிள்ளைகளை வசீகரிக்க முன்னெடுக்கப்படுகின்ற அருவருக்கத்தக்க செயற்பாடுகள், இன்று தவறான சினிமா மோகத்தால் நியாயப்படுத்தப்படுகின்றன. படித்த பெண் பிள்ளைகள் கூட, ஒழுக்கமற்ற, கட்டுக்கடங்காத ஆண்பிள்ளைகளை தெரிவு செய்கிறார்கள். அதனை நாகரீகம் என நினைக்கிறார்கள். பெஸ்டி காலர்சாரம், நம் அன்பிற்கு சாவு மணியடிக்க காத்திருக்கிறது. பெண்களின் நடைஉடைபாவனைகள், ஆண் பிள்ளைகளின் கலாச்சாரமாக மாறிவிட்டன. இப்போது தோடுகளை குத்திக்கொண்டு திரிகிறார்கள், எப்போது மெட்டி, கொலுசுகளை அணியப்போகிறார்களோ, தெரியவில்லை. வீட்டில் அன்பு என்ற பெயரில் அளப்பறைகள்தான் அதிகம். உண்மையான அன்பு என்பதை விவிலியத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்

புதிய ஏற்பாடு அன்பைக் குறிக்க அகாப்பே (ἀγάπη) என்ற சொல்லை பயன்படுத்துகிறது. பழைய ஏற்பாடு அன்பைக் குறிக்க கெசெத் (חֶסֶד) என்ற சொல்லை பயன்படுத்துகிறது. இந்த இரண்டும், உணர்ச்சிகளைக் கடந்த, தியாகம் நிறைந்த, அர்ப்பணிப்பும் ஒழுக்கம் கொண்ட அன்பு என்ற செயற்பாட்டைக் குறிக்கும். இது கடவுளிடம் இருந்து வருகிறது, நம்மையும் அதனை பின்பற்ற அழைக்கிறது. அன்பு என்ற பெயரில் நம் கலாச்சாரத்தில் நடைபெறுகின்ற அடிமைத்தனங்களும், நாடகங்களும் நிறுத்தப்படவேண்டும். அன்பு யாரையும், யாருக்கும் அடிமையாக்காது, அன்பு யாருடைய அழிவிற்கும், வறுமைக்கும் காரணமாகாது. அன்பு ஒருவரையும் அவர்க்குரியவர்களிடமிருந்து பிரிக்காது, 'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.' 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...