வியாழன், 22 பிப்ரவரி, 2024

9. தவக்காலம், முதலாம் வாரம், வெள்ளி - 23.02.2024



9. தவக்காலம், முதலாம் வாரம், வெள்ளி - 23.02.2024


எசேக்கியேல் 18: 21-28: தீயவர்கள் மனம்மாற வேண்டும் என்றுதான் கடவுள் விரும்புகின்றார்

திருப்பாடல் 130: கடவுள் நம் மனமாறுகின்றபோது, நம் குற்றங்களை நினைவில் கொள்வதில்லை

மத்தேயு 5:20-26: கோதரர்களை மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள்


கடவுள் மன்னிக்கிறார், மன்னித்துக்கொண்டே இருக்கிறார். மன்னிக்க தெரிந்த இயதம், மாணிக்க கோவில் என்று சொல்வார்கள். தற்கால உலகம், சிந்தனைகள், சித்தாந்தங்கள், மன்னிப்பை பலவீனமாக கருதி, அதனை சிறுவர்களின் உள்ளத்தில் பதியவைத்துவிடுகின்றன. யாரால் மன்னிக்க முடியும்? தங்கள் உண்ர்வுகளை, உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறவர்களால் மட்டுமே மன்னிக்க முடியும். மன்னியாமை ஒருவகையான உளவியல் குறைபாடு. மன்னியாதவர் கிறிஸ்தவராக இருக்கலாம், 'கிறிஸ்துவின் அவராக' இருக்கவே முடியாது. மன்னியாமை, முதலில் அந்த நபருக்கே தீமையை உண்டாக்கும்

நான் ஏன் மன்னிக்க வேண்டும்? இதற்கு விடை, கடவுள் என்னை மன்னிக்கிறார். என்னுடைய சொந்த உலகத்தை நானும், கடவுளும் நன்கு அறிவோம். என் சொந்த உலகில் குப்பைகளை, நாற்றங்களை அவரும் மறைக்கிறார், நானும் மறைக்கிறேன். அவர் என்னை அசிங்கப்படுத்த விரும்புவதில்லை, நான் என்னை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அவர் காட்டுவது இரக்கம், நான் காட்டுவது நடிப்பு அல்லது இறுமாப்பு. இருந்தாலும் அவர் மன்னித்துக்கொண்டே இருக்கிறார். நான் மனிதனாக தொடர்ந்திருக்க மன்னிக்க வேண்டும். என் உலகம், என் குடும்பம், என் நண்பர்கள், உறவினர்கள், உற்றார், என் சுயம், என் உடல் அனைத்தும் என்னை மன்னிக்கிறார்கள், ஏன் நான் மற்றவரை மன்னிக்க கூடாது? மற்றவரை மன்னிப்பது என்பது, என்னுடைய இரக்கச் செயல் மட்டுமல்ல, அது நான் செய்யவேண்டிய சமூக நீதியும் ஆகும். ஏனென்றால், கடவுள் என்னை மன்னிப்பதால், நான் ஒரு கடனாளி, ஆகவே மன்னிக்க வேண்டும். அனைவரையும். என்னையும்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...