செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

7. தவக்காலம், முதலாம் வாரம், புதன் - 21.02.2024


யோனா 3: 1-10 - மனமாற்றம் அல்லது அழிவு

திருப்பாடல் 51: நொறுங்கிய உள்ளத்தை கடவுள் அவமதிப்பதில்லை

நற்செய்தி 11: 29-32 - அடையாளம் கேட்கும் தீய தலைமுறையினர்


நாற்பது நாட்கள் என்பது நீண்ட நாட்களைக் குறிக்க விவிலியத்தில் பயன்படும் ஒரு அடையாளம். கடவுள் நினிவேக்கு நாற்பது நாட்களைக் கொடுக்கிறார். அதாவது மனமாற அதிகமான காலம் கொடுக்கப்படுகிறது. கடவுள் நல்லதைச் செய்ய உடனடியாக செயற்படுவதையும், தண்டிக்க காலம் தாழ்த்துவதையும் இது குறிக்கிறது. யோனாவிற்கு நினிவே செல்ல விரும்பம் இல்லை. இதனை வரலாற்றில் கவனிக்க வேண்டும். தன் நாட்டில் பெரும் பகுதியை அழித்தவர்களை, தன் மக்களை சிதறடித்தவர்களை ஒரு மனிதராக அவர் வெறுப்பது ஒரு யாதார்த்தம். ஆனால் இறைவாக்கினராக அவரால் அப்படிச் செய்ய முடியாது. விரும்பாத இடத்திற்கு யோனா போகிறார். இருந்தாலும், நாற்பது நாளில் இந்த நினிவே, அசிரிய தலைநகர் அழிய வேண்டும் என்று அவர் விரும்பியிருப்பார். யோனா விருப்பியது நடைபெறவில்லை, காரணம் மனமாற்றம்


இயேசு ஆண்டவர், ஓர் உவமையைக் பயன்படுத்துகிறார். அதாவது சாலமோனின் மாட்சியை கண்டுகொண்டவர் புறவித்தரசி ஒருவர். இஸ்ராயேல் மக்கள் கண்டு கொண்டார்களோ தெரியவில்லை. நினிவே மக்கள் கடவுளின் எச்சரிக்கையை கண்டுகொண்டார்கள். அதாவது புறவின மக்கள், கடவுளை கண்டு கொள்வதில், சொந்த மக்களுக்கு முன்ணுதராமாக இருக்கிறார்கள். இயேசுவுடைய காலத்தில் மனம்மாறாதவர்களின் பட்டியல் நீண்டு கொண்டு செல்லும், அவர்கள் அனைவரும், இயேசுவின் சொந்த மக்கள். அவர்கள் மனமாற தடையாக இருந்தது, அவர்களின் சுயநியாயப்படுத்தல் தன்மை. அவர்க்ள மனமாறவில்லை, மாறாக இயேசுவை மனமாற்ற முனைந்தவர்கள். இதனால் மாபெரும் தவறை அவர்கள் இழைத்தார்கள்


இந்த தவக்காலத்தில், மனமாற்றம் அடையவேண்டிய முதலாவது நபர் 'நான்' என்பதை உணர்ந்து செயற்படுவோம்



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...