எசாயா 55: 10-11 இயற்கை தன் வேலையை கச்சிதமாகச் செய்கிறது
திருப்பாடல் 34: நீதிமான்களை கடவுள் விடுவிக்கின்றார்
நற்செய்தி 6: 7-15 செபத்திலே பிதற்ற வேண்டாம்.
இயற்கையிடம் இருந்து மனிதர் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன. இயற்கை கர்த்தரை ஏமாற்றுவது கிடையாது. தனக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளை இயற்கை செவ்வனே நிறைவேற்றுகிறது. இயற்கையின் விதிகளுக்கு உள்ளே கடவுளின் நிர்வாகம் உள்ளது. இயற்கையை ஒப்பவே, இறைவார்த்தையும் உள்ளது. ஆனால் மனிதர்கள், இயற்கையை விட பலவிதத்தில் உயர்ந்தவர்களாக இருந்தாலும், அது அவர்களின் செயற்பாட்டில் தெரியவில்லை. இதற்கு உதாரணமாக செபத்தை எடுக்கலாம். சிலர் புரியாத மொழிகளில் செபிக்கிறார்கள், சிலர் செபங்களை மந்திரமாக மாற்றியுள்ளார்கள். செபத்தால் கடவுளின் திட்டத்தை மாற்ற முடியுமா? செபத்தால் தீயவர்கள் வல்லமைகளை பெறமுடியுமா? செபத்தால் சக மனிதருக்கு தீமை உண்டாக்க முடியுமா? நிச்சயமாக இல்லை. செபம் என்பது கடவுளின் திட்டத்தை மாற்றுவது இல்லை, மாறாக செபம் கடவுளின் திட்டத்தை அறியும் ஒரு திறமையான உத்தி. செபிக்கிறவர் உண்மையின் கடவுளின் விருப்பத்தைக் சரியாக கண்டுகொள்கிறாரே அன்றி, செபத்தால் மனிதரின் விரும்பம் கடவுளை கட்டுப்படுத்துதாக இருக்காது. ஆவியிலும் உண்மையிலும் செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக