வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

4. நான்காம் நாள்: 17.02.2024 - விபூதிப் புதனிற்கு பின்னர் வரும் சனி



நான்காம் நாள்: 17.02.2024 - விபூதிப் புதனிற்கு பின்னர் வரும் சனி


முதல் வாசகம்: எசாயா 58:9-14 - 'உன் சொந்த வழிகளில் செல்லவோ உன் சொந்த ஆதாயத்தை நாடவோ வெற்றுப் பேச்சுகளைப் பேசவோ செய்யாதிருந்தால், அப்பொழுது, ஆண்டவருக்கு ஊழியம் புரியும் மகிழ்ச்சியைப் பெறுவாய்;' ஆன்மீகம் என்பது, சொந்த விருப்பு வெருப்புக்களில் தங்கியிராது. இன்று உலகலில் பல மதங்கள், பல ஆன்மீகங்கள், இதில் ஆச்சரியம் என்னவென்றால், அதிகமான மதங்கள், அதன் நிறுவுனர்களிடமிருந்து தூரவே போய்விட்டன. எதனை அந்த நிறுவுனர்கள் எதிர்த்தார்களோ, அல்லது அதற்கு எதிராக மாற்றுக்கருத்துக்களை முன்வைத்தார்களோ, அதுவே இப்போது அவர்களின் மதங்களிற்கு புதிய முகங்களாக மாறிவிட்டன. ஆன்மீகம் குறைந்து, பக்திகளும், சடங்குகளும் ஆட்சி செய்யும் மதங்கள்தான் இன்று உலகை ஆளுகின்றன. 18ம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி ஏற்பட்டதா என்று கூட எண்ணத் தோன்றுகிறது


பதிலுரைப்பாடல் - 86: ஆண்டவரே உமது வழியை ஏனக்கு கற்பியும்


நற்செய்தி: லூக்கா 5: 27-32 - லேவி தான் செய்வதனைத்திலும் எப்போதுமே பிரமாணிக்கமாய் இருந்தார் போல. முதலில் தன் ஆயக்கார தொழிலில் கவனமாய் இருந்து, உரோமையர்களின் செல்வத்தை தேடினார். இயேசுவைக் கண்டபோது, அவரே உண்மையான செல்வம் என உடனடியாக கண்டுகொண்டார். உரோமையரின் ஆயம் அல்ல, இயேசுதான் உண்மையான ஆயம், அதாவதுகாசுஎனக்கண்டு அவரைப் பற்றிக்கொண்டார். இவர் ஒரு திறமையான ஆயக்காரர். திருப்பாடல் ஆசிரியர் சொல்வதைப் போல, ஆண்டவரின் வழியை கற்றுக்கொள்ள இந்த தவக்காலத்தில் முயற்சி செய்வோம்



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...