வியாழன், 15 பிப்ரவரி, 2024

16.02.2024 - விபூதிப் புதனிற்கு பின்னர் வரும் வெள்ளி


 முதல் வாசகம் - எசாயா 58:1-9 - எது உண்மையான நோன்பு. கொடுமைத் தழைகளை அவிழ்ப்பது, நுகத்தை தளர்த்துவது, விடுதலை செய்வது, பசித்தோருக்கு உணவு கொடுப்பது, வீடற்றோருக்கு உணவு கொடுப்பது, அனைவரையும் உள்வாங்குவது போன்றவைதான்


பதிலுரைப் பாடல் - 51 - நொருங்கிய உள்ளமே கடவுள் வாழும் இல்லம்


நற்செய்தி - மத்தேயு 9:14-15 - நோன்பு தன்னிலே புனிதமாக முடியுமா? நோன்பு தனித்து மீட்பு தரமுடியுமா? இயேசு ஆண்டவரின் வருகைக்கு முன்பே நோன்பு பிடிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. சமனர்கள், பௌத்தர்கள், எபிரேயர்கள்-யூதர்கள், நோன்பிருந்திருக்கிறார்கள். கிறிஸ்தவத்திற்கும் பின்னரும் கூட பலர் நோன்பிருக்கிறார்கள். இஸ்லாமிய சகோதரர்கள் நோன்பிருக்கிறார்கள். கிறிஸ்தவ நோன்பு என்பது என்ன? அது கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நோன்பு. கிறிஸ்தவத்தின் மிக முக்கியமான பாரம்பரியமாக இது இருந்தாலும், அது கிறிஸ்துவை மையப்படுத்தாவிட்டால் அது உண்மையான நோன்பாக இருக்க முடியாது. கிறிஸ்த நோன்பு என்பது, ஒரு மருத்துவ உத்தியோ அல்லது உளவியல் திருப்தியோ அல்ல. கிறிஸ்தவ நோன்பு என்பது ஒரு செபம், அல்லது அது ஒரு ஆன்மீகம். இந்த நோன்பு, பாவத்திலிருந்தும், பாவக் கவர்ச்சிகளிலிருந்தும் மனிதர் விடுபடுவதற்கான ஒரு முயற்சியாகும். உணவைத்தவிர்த்து, பாவத்தை வரவேற்கும் எந்த முயற்சியும் நோன்பாக இருக்க முடியாது. பாவத்தை தவிர்க்க, உணவை வரவேற்கும் எந்த முயற்சியும் நோன்பிற்கு எதிராக இருக்க முடியாது. நோன்பு தன்னிலே புனிதமானதல்ல, நோன்பையும் புனிதப்படுத்துகிறவர் நம் ஆண்டவரே. 'அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் 'இதோ! நான்' என மறுமொழி தருவார்.'


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...