யார் புத்திசாலி?
முதல் வாசகம் - இணைச் சட்டம் 30:15-20: வாழ்வு என்பது ஒரு தெரிவு, எதை தெரிவு செய்கின்றோமோ, அதுவே நம் பின்னால் வரும்
பதிலுரைப் பாடல் - திருப்பாடல் 1: பேறு பெற்றவர் யார், அவர் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர்
நற்செய்தி – லூக்கா 9:22-25: பயன்களைக் கொண்டே, நம் முயற்சிகள் அளவிடப்படுகின்றன. இது இக்கால மக்களுக்கு நன்கு தெரிந்த விடயம்தான். அதனைத்தான் இன்றைய நற்செய்தியில் இயேசு கேட்கிறார். பயன் என்ன? இவரோடு பழகினால் என்ன பயன்? இந்த பாடத்தை படித்தால் என்ன பயன்? இந்த தொழிலை முயன்றால் என்ன பயன்? இந்த நாட்டிற்கு சென்றால் என்ன பயன்? இது எல்லாவற்றிக்கும் விடை கண்டுபிடிக்கும், மனிதன், இயேசுவை பின்பற்றினால் வரும் பயன்களை மட்டும் மறப்பதேனோ? இந்த உலகத்தை தமதாக்க முயன்ற பலர் தங்கள் ஆன்மாவைக்கூட தமதாக்க முடியாமல் இறந்து போனார்கள், அவர்களைத்தான் இந்த உலகம், 'மகா' என்ற பெயரில் அழைக்கிறது. உண்மையான 'மகா' என்பவர்கள், ஆன்மாவைக் காக்கிறவர்கள்தான். இந்த தவக்காலத்தில் அழியாத ஆன்மாவை காக்கும் ஞானிகளாவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக