சனி, 17 பிப்ரவரி, 2024

தவக்காலம் முதலாம் ஞாயிறு 18.02.2024


 தவக்காலம் முதலாம் ஞாயிறு 18.02.2024


உடன்படிக்கை: கடவுள் காலத்திற்கு காலம் உடன்படிக்கை செய்துகொண்டே வருகின்றார். மனிதர்கள் செய்வது ஒப்பந்தம், கடவுள் விரும்புவதோ உடன்படிக்கை. ஒப்பந்தத்திற்கும் உடன்படிக்கைக்கும் என்ன வித்தியாசம். ஒப்பந்தம், இரண்டு எதிரிகள் அல்லது இரண்டு பலங்களைக் கொண்ட தரப்பிற்கு இடையில் ஏற்படுத்தப்படுகிறது. ஒப்பந்தத்தில், ஒரு சாரார் மற்ற சாராரை எப்போதும் சந்தேக கண்களாலேயே பார்த்துக்கொண்டு இருப்பர். ஒப்பந்தத்தை மீறுகிறவர் தண்டிக்கப்படுவர், உடனடியாக ஒப்பந்தம் முடிவிற்கு வந்துவிடும். ஓப்பந்தம், உண்மையில் ஒரு போராட்டமே

உடன்படிக்கை என்பது இரண்டு அன்பு உள்ளங்களுக்கிடையே மேற்கொள்ளப்படுவது. தந்தை-மகள், தாய்-மகன், அண்ணன்-தங்கை, மாமன்-மச்சான், காதலன்-காதலி, நண்பன்-நண்பி, மற்றும் கடவுள்-மக்கள். உடன்படிக்கை இதயத்தில் செய்யப்படுவது. எபிரேயம் உடன்படிக்கையை 'பெரித்' என அழைக்கும். இந்த உடன்படிக்கை இதயத்தில் வெட்டப்படுவது, ஆகவே அழிந்து போகாதது. உடன்படிக்கையில் ஒரு பகுதி மற்றவரை எப்படி திருப்திப்படுத்தும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும். உடன்படிக்கை முடிவடையாது, முறிவடையாதது. ஊடன்படிக்கையின் ஊடல் உண்டு சண்டை இல்லை, ஏக்கம் உண்டு சந்தேகம் இல்லை. கடவுள் ஆதாம் தொடக்கம், அரசர்கள் வரை உடன்படிக்கைதான் செய்தார். மனிதர்கள் கடவுளோடு எப்போதம் ஒப்பந்தம் செய்வதிலேயே காலம் கடத்தினார்கள், கடத்துகிறார்கள்கடவுள் செய்த உடன்படிக்கையின் உச்ச கட்டம்தான் இயேசுவின் மானிட உடலேற்பு. பாஸ்காதான் கடவுள் செய்த உடன்படிக்கையின் அதி உச்சம். கல்வாரி மரணம்தான் மனிதர்கள் கடவுளுக்கு கொடுத்த அசிங்கமான ஒப்பந்த மீறல்

தவக்காலம் உடன்படிக்கையின் புதுப்பித்தல் காலம், ஒப்பந்த சிந்தனையை விலக்கி, உடன்படிக்கையை மனநிலையைப் புதுப்பித்துக்கொள்வோமா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...