14. தவக்காலம், இரண்டாம் வாரம், வியாழன் - 29.02.2024 'சபிக்கப்படுவர்'
எரேமியா 17:5-10 - பேறுபெற்றோரும் சபிக்கப்பட்டோரும்
திருப்பாடல் 1: ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்
லூக்கா 16: 19-31 - அவர்கள் நம்ப மாட்டார்கள்
சபிக்கப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், இந்த இரண்டு சாராரும் சேர்ந்து உலகை உருவாக்குகின்றார்கள். சபிக்கப்பட்டவர்கள், இவர்கள் யாரால் சபிக்க்படுகிறார்கள்? இவர்கள் தங்களால் தாங்களே சபிக்கப்படுகிறார்கள். இயேசு யாரையும் சபிக்கிறவர் அல்ல. சாபத்தைக் குறிக்க ஆரூர் (אָר֤וּר) என்ற எபிரேயச் சொல் விவிலியத்தின் முதல் ஏற்பாட்டில் பயன்படுத்தப்படுகின்றது. இன்றைய திருப்பாடல நற்பேறு பெற்றவர் யார் என்பதை மிக அழகாகக் காட்டுகிறது. நறபேறு பேற்றவர், கடவுளின் திட்டப்படி நடக்கிறவர், இதனை செய்யாத போது, அவர் தன்னைத் தானே சபிக்கப்பட்டவர் நிலைக்கு தள்ளிக்கொள்கிறார். ஆசீரும், சாபமும் ஒவ்வொருவருடைய தெரிவைப் பொறுத்தே அமைகிறது.
ஆசீர் பெற்றவர்கள், தங்களின் உலகத்தை பெரிதாக்கிக் கொண்டு, நிம்மதியான வாழ்வை அனுபவிக்கிறார்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தாலும், மனத்தால் உலகத்தையே ஆட்கொண்ட செல்வத்தர்கள் ஆகிறார்கள்: ஆனால் சபிக்கப்பட்டவர்கள், செல்வர்கள் ஆனாலும், உண்மையிலேயே ஏழைகளாக இருக்கிறார்கள்.
ஒரு மனிதனுடைய உண்மையான ஆசீர், கடவுள். இயேசுதான், ஒரு மனிதனுடைய ஆசீர். இயேசுவை தனதாக்கிக் கொள்கிறவர், யாரையும் ஆசீர்வதிக்க தேவையில்லை, அவர் அசீராகவே மாறிவிடுகிறார். ஆசீர் மிக பெறுமதி வாய்ந்தது, இதற்கு பலவற்றை செலவு செய்ய வேண்டும், மனக்கோட்டைகள், மனச் சுவர்கள் உடைக்கப்பட வேண்டும். தற்பெருமை, ஆணவம், இறுமாப்பு, நான் என்ற மமதை, சுயநல திட்டங்கள் இல்லாமல் ஆக்கப்படவேண்டும். இந்த தவக்காலத்தில், ஆசீர்வாதத்தின் வாய்க்கால்களாக மாற்றம் பெறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக