தானியேல்: 9:4-11 நாங்கள் பாவம் செய்தோம்
திருப்பாடல்: 79 - எங்கள் பாவங்களுக்கு ஏற்றபடி நடத்தாதேயும்
நற்செய்தி: லூக்கா - 6:36-38
ஏன் இரக்கமுள்ளவர்களாக இருக்கவேண்டும்? இதுதான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்கும் கேள்வி. இரக்கத்தைக் குறிக்க றகாம் רַחַם என்ற சொல் எபிரேய விவிலியத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த சொல், தாயின் கருப்பையைக் குறிக்கிறது. தாயின் கருப்பையிலிருந்தே, இரக்கம் பிறக்கிறது என்பது மிக அழகான அர்த்தத்தைக் கொடுக்கிறது. இருந்தாலும், இந்த சொல் ஓர் ஆண்பால் சொல். இதிலிருந்து, றகாம்-இரக்கம் என்பது அனைவருக்கும் பெருத்தமான ஒரு பண்பு என்பது புலனாகிறது.
இன்றைய உலகம் போதிக்கும், கெத்து, வன்முறை, அடாவடித்தனம், திமிரு போன்ற சினிமா பண்புகள், இரக்கம் என்ற இறையரசின் புன்னியத்திலிருந்து நம்மை தூர கொண்டுபோய் விட்டுவிட்டது. இரக்கமுடையவர்கள், கோழைகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். இரக்கம் உடையோர், காலம் கடந்தவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் 'திமிரு' என்ற அடையாளத்தை கொண்டவர்கள், வீரர்களாக கதாநயகர்கள் போல சித்தரிக்கப்படுகிறார்கள். இந்த சொல்லை சினிமாவுக்கும் தலைப்பாக கொடுத்துள்ளார்கள். பல யூடிப் சிறிய காணொளிகளில் இந்த தலைப்பில் பல வீடியோக்களும் உள்ளன. சில முச்சக்கர வண்டிகளின் பின்னாலும், இந்த சொல்லையும், அதனை புகழ்வதையும் காணலாம்.
இந்த ஆபத்தான சிந்தனையிலிருந்து விடுபடுவதற்கு, இத்தவக்காலம் ஒரு நல்ல வாய்ப்பு. கடவுள் நம்மீது இரக்கம் உள்ளவாராய் இருக்கிறார், ஆகவே நாம் இரக்கம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். நாம் பாவிகாக இருந்தும், கடவுள் நம்மை அவமானப்படுத்துவதில்லை, கடவுள் நம்மை கைவிடுவதில்லை, கடவுள் நம்மை அழந்துபோகும் அளவிற்கு தண்டிப்பதில்லை. ஆகவே, மனிதர்களாக இருக்க, இரக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக