2019 Jan 10 Thu: Christmas Weekday
1 Jn 4: 19 – 5: 4/ Ps 72: 1-2. 14 and 15bc. 17/ Lk 4: 14-22
1 Jn 4: 19 – 5: 4/ Ps 72: 1-2. 14 and 15bc. 17/ Lk 4: 14-22
சொந்த வீடும் சொந்த ஊரும் ஒருவரை, தம்மவராகவே என்றும் பார்க்கும். சில வேளைகளில் இது நன்மையளிக்கும், சில வேளைகளில் இது தீமையாகவும் அமைந்துவிடும். நண்பர்களும், உறவினர்களும் சில வேளைகளில் தங்களவர்களின் உச்சத்தை ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள். நம்மவர்கள் வாழ்வின் உயர்ந்த இடங்களுக்கு செல்கின்ற போது, நாம் விரும்பினாலும், இல்லாவிடினும் அவர்களுக்கு உரிய இடத்தை கொடுக்கவேண்டியது ஒரு நீதி. ஏனெனில் எல்லா தலைவர்களும் குடும்பங்களிலிருந்துதான் உருவாகிறார்கள். குழந்தைகள் வளரவேண்டும், வளர்ந்தவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
இன்றைய வாசகம் இரண்டு வகையான பார்வைகளை தருகிறது. இயேசுவின் பார்வை சரியாக இருக்கிறது. எசாயாவின் இறைவாக்கை அவர் சரியாக வாசித்து தன்னை மெசியாவாக அவர் கண்டுகொண்டு அடையாளமும் படுத்துகிறார்கள். அவர்தான் ஆண்டவரின் ஆசிபெற்றவர், ஆண்டவரால் அருட்பொழிவு செய்யப்பட்டவர், என்பதும் ஏழைகளும், எளியவர்களும், பார்வையற்றவர்களும், ஒடுக்கப்ட்டவர்களும், இனி மகிழ்வடைவர் என்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறார். அவருடைய பார்வை துல்லியமாக இருக்கிறது. அங்கிருந்த மற்றவர்களின் பார்வை பிழையாக இருக்கிறது. இவர்கள் நாசரேத்து இயேசுவை தச்சரின் மகனாக காண முயன்று, அவரின் மெசியாத்துவதை இழந்துவிடுகிறார்கள். இது தவறான கணிப்பு. இந்த தவறான பார்வை, மெசியாவை பணிசெய்ய விடாமல் தடுத்துவிடுகிறது. பார்வைகளை சரிப்படுத்தி, அயலவர்களை அவர்களுக்குரிய இடத்தில் பார்த்து, ஆண்டவரை பற்றிக்கொள்வோம்.
Wish you good day.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக