புதன், 23 ஜனவரி, 2019

2019 Jan 24 Thu: Francis de Sales, bp,

Heb 7: 25 – 8: 6/ Ps 40: 7-8a. 8b-9. 10. 17/ Mk 3: 7-12

சாதாரணமாக கூட்டத்தை ஆபத்தானது என்பார்கள் அரசியல்வாதிகள். கட்டுக்கடங்காத கூட்டம் ஆரோக்கியமானதல்ல என்பர் சமுகவியலாளர்கள். விவிலியத்தில் முக்கியமாக புதிய ஏற்பாட்டில் கூட்டம் என்ற சொல் அடையாளம் நிறைந்த ஒன்று. இயேசுவுடைய பணிக்காலத்தில் அவரைச் சுற்றி சீடர்கள் குழாமும், மக்கள் கூட்டமும் இறுதிவரைக்கும் இருந்திருக்கிறது. சீடர்களை இயேசுவே தெரிவு செய்திருந்தார், அல்லது வந்தவர்களை அவர் நன்கு தெரிந்;திருந்தார். கூட்டம் இயேசுவின் செயற்பாடுகளையும், அவரைப்பற்றி நாட்டுப்புறங்களில் சொல்லப்பட்ட கதைகளையும் கேட்டு அதிசயங்களைப்பார்க்க கூடியது. இந்த கூட்டத்தினுள் நல்ல எண்ணத்தோடு சிலர் இருந்தாலும், அதிகமானவர்கள் சீடத்துவத்தை மையப்படுத்தி வராதவர்கள் என்பது கண்கூடு
இயேசு கலிலேய கடற்கரையோரம் தன்சீடர்களைக் கூட்டிக்கொண்டு போகிறார், கூட்டம் ஒன்று அவரைக் கேட்காமல் அவைரப் பின்பற்றுகிறது. சீடர்கள் இயேசுவோடு இருக்க விரும்பினார்கள், அவரையே தங்கள் வாழ்வின் மையமாகக் கொள்ள முயற்ச்சி செய்தார்கள். கூட்டம், தங்களை மையப்படுத்தச் சொல்லி இயேசுவை கேட்கிறது, அத்தோடு தங்கள் விருப்பங்களை அவர் நிறைவேற்றக் கேட்கிறது. இயேசு கூட்டத்திற்கும் சீடர்களுக்கு வித்தியாசம் இருக்கிறது என்பதை நன்கு அறிந்திருந்தார், இதனால்தான் கூட்டத்தை அவர் தன்னை நெருங்கவிட வில்லை. கூட்டம் இயேசுவை எப்படியாவது தொட்டுவிடவேண்டும் என விரும்பியது, இந்த தொடுதலை இயேசு விரும்பவில்லை போல, அதனால்தான் அவர், அவர்களுக்கிடையே இடைவெளியை உருவாக்குகிறார். கூட்டத்தினுள் தீய ஆவிகளும் இருந்திருக்கின்றன, அவைக்கு இயேசு இறைமகன் என்பதும் தெரிந்திருக்கிறது

இயேசு விரும்புவது சீடத்துவத்தை, கூட்டத்தை அல்ல, ஏனெனில் கூட்டம் இயேசுவில் நம்பிக்கை கொள்ளாமல், அவர் அதிசயங்களில் நம்பிக்கை வைத்தது. சீடத்துவம் இயேசுவில் நம்பிக்கை வைக்கிறது. கூட்டம் இன்றிருக்கும் நாளை இல்லாமல் போகும், சீடத்துவம் என்றும் இயேசுவில் நிலைத்திருக்கும். கூட்டத்தை தாண்டி அவர் சீடராகுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...