செவ்வாய், 8 ஜனவரி, 2019












Good day to you all, Greetings from Sangamam. 

கடவுளை நம்பாதவர்கள்கூட பேய்களிலும், தீய சக்திகளிலும் மனதை தொலைப்பது வேடிக்கையான விடயம். இஸ்ராயேலருக்கு நல்ல தண்ணீர் கடவுளின் அடையாளமாகவும், கடல் தண்ணீர் தீய சக்தியின் அடையாளமாகவும் தென்பட்டிருந்திருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளின் முற்கால நம்பிக்கைகள் சில, கடலை தீய சக்திகளின் உறைவிடங்களாக பார்த்திருக்கின்றன. கடவுளின் ஆவி நீர்த்திரளின் மேல் அசைந்தாடினார் என தொடக்கநூல் சொல்வது, கடவுள் தீய ஆவிகளையும் கட்டுப்படுத்தக்கூடியவர் என்பதை காட்டுகிறது. இயேசு புதிய ஏற்பாட்டில் தீய ஆவிகளை பன்றிக்கூட்டத்தினுள் அனுப்ப அவை கடலில் விழுந்து மாண்டன எனக் காட்டுவதும் இந்த நம்பிக்கையைத்தான் காட்டுகிறது
இன்றைய நற்செய்தி பகுதியில் வரும் சில அடையாளங்கள், கடவுள் இல்லாத
நிகழ்வைக் காட்டுகின்றன. பொழுது சாய்தல், படகு நடுக்கடலில் இருத்தல், பலமான எதிர்க்காற்று, போன்றவை எதிர்மறையான அடையாளங்கள். இயேசு கடலின் மீது நடந்து, தனக்கு தீய சக்திகளின் மீதும் முழு அதிகாரம் உள்ளது என்பதையும், இயற்கைக்கும் அவர்தான் கடவுள் என்பதையும் காட்டுகிறார். ஏற்கனவே அப்பங்களின் பெருக்கத்தைக் கண்ட சீடர்கள் ஆண்டவரை அடையாளம் காணத் தவறுகிறார்கள். இயேசுவின் இன்றைய வார்த்தைகள் மிக நம்பிக்கை அளிக்கின்றன. 'அஞ்சாதீர்கள், நான்தான் துணிவோடிருங்கள்' என்ற இந்த வார்த்தைகள் நம்முடைய இக்கால பயங்களுக்கு நிச்சயமாக மருந்தளிக்கும். மலைத்துப்போக வேண்டிய தேவையில்லை, உள்ளங்களை மழுங்கிப்போகமால் பார்த்திருக்கவேண்டும். நம் வாழ்வின் கடல்கள் கொந்தளித்தாலும், நம் நேரங்கள் இரவானாலும், நம் ஆண்டவர் நம்மை நோக்கி வருகிறார் என நம்புவோம்

கடவுளைக்கூட பேயாக பார்க்கும் அறிவீனம் மனிதர்களுக்கு மட்டும்தான் உள்ளது
பேய்கள் உள்ளே இருக்கின்றன - சுயநலவாதிகளின் வீட்டினுள்ளும், உள்ளத்தினுள்ளும்.

வெளியில் உள்ளவை கடவுளும், அவர் வானதூதர்களான நல்லவர்களும் மட்டுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...