வெள்ளி, 25 ஜனவரி, 2019


2019 Jan 26 Sat: Timothy and Titus, bps M
2 Tm 1: 1-8 or Ti 1: 1-5/ Ps 96: 1-2a. 2b-3. 7-8a. 10/ Mk 3: 20-21

,NaRtpd; cwtpdh;fs; mtUila kdeyj;ij Kd;dpl;L mtiu gpbj;Jnfhz;L nry;y Kad;wdh; vd;W ,e;jg; gFjp fhl;LfpwJ. ,NaRtpd; cwtpdh;fs; ahh; vd;W khw;F nrhy;yhky; tpl;LtpLfpwhh;. ,e;j gFjp tuyhw;wpy; gy Nfs;tpfis cUthf;fpapUf;fpwJ. rpy gphptpidthj mbg;gilthjpfs;> ,NaRtpd; md;id khpahit> ,e;j cwtpdh; vd;w gjj;jpw;Fs; cl;GFj;jg;ghh;f;fpd;wdh;. ,jw;fhd tha;g;G kpf FiwthfNt ew;nra;jpfspy; cs;sJ. khw;F kpfr; RUf;fkhfTk;> NeubahfTk; juTfis jUfpwth;> ,e;j ,lj;jpy; mth; ,NaRtpd; md;id khpahit Fwpg;gpltpy;iy vd;gJ kpfj; njspT. ehd;F ew;nra;jpfspd; gb ,NaRtpd; md;id khpah mtUila gzpf;F ,ilA+whf ,Ue;jjpy;iy> khwhf mth;jhd; ,NaRtpd; gzpia jf;f fhyj;jpw;F Kd;Ng njhlq;fpitj;jth;> mj;NjhL fy;thhp tiuf;Fk; mtNuhL> mth; gzpapy; gazk; nra;jth;. Mf khpah ,NaRitg; gw;wp jtwhf Ghpe;jpUf;f ve;j tha;g;Gk; ,y;iy. 
,g;gbapUf;f ahh; ,e;j cwtpdh;fs;? fpNuf;f %y tptpypak;> ,e;j nrhy;iy mtUilath;fs; vd;Nw nfhz;Ls;sJ. ,J ,NaRtpd; neUq;fpa cwtpdh;fshfNth> my;yJ mtUila ez;gh;fshfNth ,Ue;jpUf;fyhk;. mj;NjhL A+jh;fs; rf A+jh;fisAk; jq;fs; cwtpduhfNt fz;lhh;fs;> Mf ,J rf A+juhfTk;$l ,Ue;jpUf;fyhk;. ,e;j egh;fs; ,NaRit gpbf;f tUtjw;fhd fhuzk; mth;fs; ,NaRit Ghpe;Jnfhs;shky; ,Ue;jNj vd;gJjhd; khw;Ftpd; nra;jp. 
Muk;g fhy jpUr;rigapy;> fpwp];jth;fs; gy ,d;dy;fis jq;fs; FLk;gj;jpDs;Ns re;jpj;jhh;fs;> ,e;j re;jh;g;gj;jpy;> mg;gbahd ,d;dy;fis ,NaR$l re;jpj;jhh; vd;W mofhfr; nrhy;yp fpwp];jt rhl;rpaj;ij jplg;gLj;Jfpwhh; khw;F. 

,NaRit mwptpf;f Gwg;gl;lhy;> rpy Ntisfspy; mbg;gil Njitahd cztpw;Fk; NeukpUf;fhJ> ez;gh;fs; $l gphpe;J Nghthh;fs;> mj;NjhL cwtpdh;fs; $l ek;ik Ghpe;Jnfhs;shky; Nghthh;fs; vd;Dk; nra;jp> ,d;Wk; ekf;F nghUe;Jk;.

புதன், 23 ஜனவரி, 2019

2019 Jan 24 Thu: Francis de Sales, bp,

Heb 7: 25 – 8: 6/ Ps 40: 7-8a. 8b-9. 10. 17/ Mk 3: 7-12

சாதாரணமாக கூட்டத்தை ஆபத்தானது என்பார்கள் அரசியல்வாதிகள். கட்டுக்கடங்காத கூட்டம் ஆரோக்கியமானதல்ல என்பர் சமுகவியலாளர்கள். விவிலியத்தில் முக்கியமாக புதிய ஏற்பாட்டில் கூட்டம் என்ற சொல் அடையாளம் நிறைந்த ஒன்று. இயேசுவுடைய பணிக்காலத்தில் அவரைச் சுற்றி சீடர்கள் குழாமும், மக்கள் கூட்டமும் இறுதிவரைக்கும் இருந்திருக்கிறது. சீடர்களை இயேசுவே தெரிவு செய்திருந்தார், அல்லது வந்தவர்களை அவர் நன்கு தெரிந்;திருந்தார். கூட்டம் இயேசுவின் செயற்பாடுகளையும், அவரைப்பற்றி நாட்டுப்புறங்களில் சொல்லப்பட்ட கதைகளையும் கேட்டு அதிசயங்களைப்பார்க்க கூடியது. இந்த கூட்டத்தினுள் நல்ல எண்ணத்தோடு சிலர் இருந்தாலும், அதிகமானவர்கள் சீடத்துவத்தை மையப்படுத்தி வராதவர்கள் என்பது கண்கூடு
இயேசு கலிலேய கடற்கரையோரம் தன்சீடர்களைக் கூட்டிக்கொண்டு போகிறார், கூட்டம் ஒன்று அவரைக் கேட்காமல் அவைரப் பின்பற்றுகிறது. சீடர்கள் இயேசுவோடு இருக்க விரும்பினார்கள், அவரையே தங்கள் வாழ்வின் மையமாகக் கொள்ள முயற்ச்சி செய்தார்கள். கூட்டம், தங்களை மையப்படுத்தச் சொல்லி இயேசுவை கேட்கிறது, அத்தோடு தங்கள் விருப்பங்களை அவர் நிறைவேற்றக் கேட்கிறது. இயேசு கூட்டத்திற்கும் சீடர்களுக்கு வித்தியாசம் இருக்கிறது என்பதை நன்கு அறிந்திருந்தார், இதனால்தான் கூட்டத்தை அவர் தன்னை நெருங்கவிட வில்லை. கூட்டம் இயேசுவை எப்படியாவது தொட்டுவிடவேண்டும் என விரும்பியது, இந்த தொடுதலை இயேசு விரும்பவில்லை போல, அதனால்தான் அவர், அவர்களுக்கிடையே இடைவெளியை உருவாக்குகிறார். கூட்டத்தினுள் தீய ஆவிகளும் இருந்திருக்கின்றன, அவைக்கு இயேசு இறைமகன் என்பதும் தெரிந்திருக்கிறது

இயேசு விரும்புவது சீடத்துவத்தை, கூட்டத்தை அல்ல, ஏனெனில் கூட்டம் இயேசுவில் நம்பிக்கை கொள்ளாமல், அவர் அதிசயங்களில் நம்பிக்கை வைத்தது. சீடத்துவம் இயேசுவில் நம்பிக்கை வைக்கிறது. கூட்டம் இன்றிருக்கும் நாளை இல்லாமல் போகும், சீடத்துவம் என்றும் இயேசுவில் நிலைத்திருக்கும். கூட்டத்தை தாண்டி அவர் சீடராகுவோம்!

புதன், 9 ஜனவரி, 2019










2019 Jan 10 Thu: Christmas Weekday
1 Jn 4: 19 – 5: 4/ Ps 72: 1-2. 14 and 15bc. 17/ Lk 4: 14-22
சொந்த வீடும் சொந்த ஊரும் ஒருவரை, தம்மவராகவே என்றும் பார்க்கும். சில வேளைகளில் இது நன்மையளிக்கும், சில வேளைகளில் இது தீமையாகவும் அமைந்துவிடும். நண்பர்களும், உறவினர்களும் சில வேளைகளில் தங்களவர்களின் உச்சத்தை ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள். நம்மவர்கள் வாழ்வின் உயர்ந்த இடங்களுக்கு செல்கின்ற போது, நாம் விரும்பினாலும், இல்லாவிடினும் அவர்களுக்கு உரிய இடத்தை கொடுக்கவேண்டியது ஒரு நீதி. ஏனெனில் எல்லா தலைவர்களும் குடும்பங்களிலிருந்துதான் உருவாகிறார்கள். குழந்தைகள் வளரவேண்டும், வளர்ந்தவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்
இன்றைய வாசகம் இரண்டு வகையான பார்வைகளை தருகிறது. இயேசுவின் பார்வை சரியாக இருக்கிறது. எசாயாவின் இறைவாக்கை அவர் சரியாக வாசித்து தன்னை மெசியாவாக அவர் கண்டுகொண்டு அடையாளமும் படுத்துகிறார்கள். அவர்தான் ஆண்டவரின் ஆசிபெற்றவர், ஆண்டவரால் அருட்பொழிவு செய்யப்பட்டவர், என்பதும் ஏழைகளும், எளியவர்களும், பார்வையற்றவர்களும், ஒடுக்கப்ட்டவர்களும், இனி மகிழ்வடைவர் என்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறார். அவருடைய பார்வை துல்லியமாக இருக்கிறது. அங்கிருந்த மற்றவர்களின் பார்வை பிழையாக இருக்கிறது. இவர்கள் நாசரேத்து இயேசுவை தச்சரின் மகனாக காண முயன்று, அவரின் மெசியாத்துவதை இழந்துவிடுகிறார்கள். இது தவறான கணிப்பு. இந்த தவறான பார்வை, மெசியாவை பணிசெய்ய விடாமல் தடுத்துவிடுகிறது. பார்வைகளை சரிப்படுத்தி, அயலவர்களை அவர்களுக்குரிய இடத்தில் பார்த்து, ஆண்டவரை பற்றிக்கொள்வோம்

Wish you good day. 

செவ்வாய், 8 ஜனவரி, 2019












Good day to you all, Greetings from Sangamam. 

கடவுளை நம்பாதவர்கள்கூட பேய்களிலும், தீய சக்திகளிலும் மனதை தொலைப்பது வேடிக்கையான விடயம். இஸ்ராயேலருக்கு நல்ல தண்ணீர் கடவுளின் அடையாளமாகவும், கடல் தண்ணீர் தீய சக்தியின் அடையாளமாகவும் தென்பட்டிருந்திருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளின் முற்கால நம்பிக்கைகள் சில, கடலை தீய சக்திகளின் உறைவிடங்களாக பார்த்திருக்கின்றன. கடவுளின் ஆவி நீர்த்திரளின் மேல் அசைந்தாடினார் என தொடக்கநூல் சொல்வது, கடவுள் தீய ஆவிகளையும் கட்டுப்படுத்தக்கூடியவர் என்பதை காட்டுகிறது. இயேசு புதிய ஏற்பாட்டில் தீய ஆவிகளை பன்றிக்கூட்டத்தினுள் அனுப்ப அவை கடலில் விழுந்து மாண்டன எனக் காட்டுவதும் இந்த நம்பிக்கையைத்தான் காட்டுகிறது
இன்றைய நற்செய்தி பகுதியில் வரும் சில அடையாளங்கள், கடவுள் இல்லாத
நிகழ்வைக் காட்டுகின்றன. பொழுது சாய்தல், படகு நடுக்கடலில் இருத்தல், பலமான எதிர்க்காற்று, போன்றவை எதிர்மறையான அடையாளங்கள். இயேசு கடலின் மீது நடந்து, தனக்கு தீய சக்திகளின் மீதும் முழு அதிகாரம் உள்ளது என்பதையும், இயற்கைக்கும் அவர்தான் கடவுள் என்பதையும் காட்டுகிறார். ஏற்கனவே அப்பங்களின் பெருக்கத்தைக் கண்ட சீடர்கள் ஆண்டவரை அடையாளம் காணத் தவறுகிறார்கள். இயேசுவின் இன்றைய வார்த்தைகள் மிக நம்பிக்கை அளிக்கின்றன. 'அஞ்சாதீர்கள், நான்தான் துணிவோடிருங்கள்' என்ற இந்த வார்த்தைகள் நம்முடைய இக்கால பயங்களுக்கு நிச்சயமாக மருந்தளிக்கும். மலைத்துப்போக வேண்டிய தேவையில்லை, உள்ளங்களை மழுங்கிப்போகமால் பார்த்திருக்கவேண்டும். நம் வாழ்வின் கடல்கள் கொந்தளித்தாலும், நம் நேரங்கள் இரவானாலும், நம் ஆண்டவர் நம்மை நோக்கி வருகிறார் என நம்புவோம்

கடவுளைக்கூட பேயாக பார்க்கும் அறிவீனம் மனிதர்களுக்கு மட்டும்தான் உள்ளது
பேய்கள் உள்ளே இருக்கின்றன - சுயநலவாதிகளின் வீட்டினுள்ளும், உள்ளத்தினுள்ளும்.

வெளியில் உள்ளவை கடவுளும், அவர் வானதூதர்களான நல்லவர்களும் மட்டுமே

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...