ஞாயிறு, 16 ஜூலை, 2017

சிவப்பு சிலுவைகள்: Red colour Cross

திங்கள், 17 ஜூலை, 2017
சிவப்பு சிலுவைகள்

வடக்கு அரசியலின் கோமாளித்தனங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. யார் குற்றவாளிகள் யார் சுத்தவாளிகள் என்பதை கண்டுபிடிக்கவே வாழ்நாளும், தமிழரின் வரலாறும் போதாது என்பது போல் உள்ளது. எவ்வளவு காலம்தான் இந்த நிலை தொடரும் என்றும் புரியவில்லை. மேற்கத்தைய நாடுகளின் மனித மேம்பாடுகளும் அறிவியலும் அசூர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்க, நம் நாட்டில் பல விடயங்கள் பினநோக்கி போய்க்கொண்டிருக்கின்றன. வித்தியா படுகொலையின் சூத்திரதாரிகள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பிறந்து கொண்டிருக்கிறார்கள். சாதாரண மக்களுக்கு ஈழத்தின் நிலைமை நிச்சயமாக பாரமான சிலுவையாக இருக்கும்
இதனைப் பற்றி தியானித்துக் கொண்டிருக்கையில் இன்றைய வாசகங்கள் இதனையே நினைவூட்டுவதாக அமைவது போல தோன்றுகிறது. இஸ்ராயேலரின் வளர்ச்சியைக் கண்ட பாரவோன் அவர்களின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கிறான். முடியாமல் போகவே, ஆண் சிசுக்களை நைல் நதியில் வீசிக் கொலை செய்ய ஆணையிடுகிறான். இதனை சாத்தானின் ஆட்சி எனலாம் (வி. 1,8-14). கடவுளோடு போராட சுயஅறிவில்லாத மனிதர்கள் இப்படித்தான் நினைப்பார்கள் போல. இதே நிலைதான ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கும் இருந்தது. அவர்கள் தங்கள் சொந்த ஆலயம், செபக்கூடம்மற்றும் வீடுகளில் இருந்து தூக்கி எறியப்பட்டார்கள். கண்ணுக்கு தெரியாத இயேசுவிற்காக இவர்களுக்கு துன்புறுவது அவ்வளவு இலகுவாக இருந்திருக்காது. இதனால்தான் மத்தேயு சிலுவையைப் பற்றி நினைவூட்டுகிறார் (மத் 10,34-11,1).
சிலுவையைப் பற்றி பல தவறாக புரிதல்களை கிறிஸ்தவம் தெரியாதவர்கள் சொல்லுவார்கள். அது சரியாகாது. சிலுவை துன்பத்தின் அடையாளம் என்கிறார்கள். சிலுவை பாரத்தின் அடையாளம் என்கிறார்கள். சிலுவை தண்டனையின் அடையாளம் என்கிறார்கள். இந்த அர்த்தஙங்கள் இயேசு ஆண்டவர் சிலுவையில் தொங்குவதற்கு முன், உரோமையர்கள் கொடுத்த அர்த்தங்கள். இது கிறிஸ்தவத்தின் அர்த்தங்கள் அல்ல. சாதாரணமாவர்கள் சிலுவையைப் பற்றி சொல்ல, சிலுவை ஒன்றும் சினிமாத் தொடர் அல்ல, அல்லது விடுகதையும் அல்ல
இயேசுவிற்கு சிலுவைதான் சிம்மாசனம், அவருக்கு இதுதான் அரச ஆயூதம், அத்தோடு இதுதான் அவர் பாவிக்கும் அருளின் ஊற்று. இதனைத் தூக்கினால்தான் வாழ்வு. ஆக சிலுவையின் நிறம் சிவப்பு என்பதைவிட சிலுவையின் நிறம் பச்சை என சொல்லலாம். சிலுவையின் இரகசியத்தை இயேசுதான் விளக்கமுடியும். விவிலியம்தான் சிலுவையை வர்ணிக்க முடியும்
தற்கால துன்பத்தை தூக்கி சுமந்து, வருங்கால சந்ததிக்கு நல்லதோர் எதிகாலம் செய்வோம். நாம்தான் இதனை செய்யவேண்டும். ஆண்டவரும் கூட இருக்கிறார்.
நலம் உண்டாகட்டும்!!!

மி. ஜெகன்குமார் அமதி
அமதியகம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...