புதன், 19 ஜூலை, 2017

குழந்தைகள்: Kids

புதன், 19 ஜூலை, 2017
குழந்தைகள்

குழந்தைகளை விரும்பாதவர்கள் இந்த உலகத்திலே இருக்க மாட்டார்கள். எப்படிப்பட்ட தீயவர்களுக்கும் குழந்தைகள் என்றால் சற்று மனம் இரங்கும். அதுவும் தம் குழந்தைகள் என்றால் இன்னும் அதிகமாக பாசம் வரும். எந்த ஒரு தகப்பனும் தன் கஸ்டத்தை தன் குழந்தை அனுபவிக்கக்கூடாது என விரும்புவான். எந்த ஒரு தாயும் தன் சுவாசத்தைவிட தன் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பாள். எரிந்து கொண்டிருக்கும் கோப சுவாலைகூட ஒரு மழழையின் சிரிப்பைக் கண்டால் அப்படியிலே நூர்ந்து விடும். ஏன் யாராக இருந்தாலும் குழந்தையை விரும்புகிறார்கள்? குழந்தை பலவற்றிலே பலவீனமானது. தமிழ், குழந்தையை 'அது' என்கிறது. ஆங்கிலமும் மற்றும் பல மொழிகளும் குழந்தையை 'அது' என்றுதான் அழைக்கின்றன. ஏனெனில் குழந்தைக்கு பகுத்தறிவு இல்லை, இதனால் அதனுடைய செயற்பாடுகள் மனித செயற்பாடுகள் 
இல்லை என நினைக்கின்றார்கள். குழந்தைகளின் குற்றங்கள் இலகுவாக மன்னிக்கப்படுகின்றன. குழந்தைகள் இலகுவில் பயப்படுவார்கள். உணவு, உடை, உறையுளுக்காக தங்கள் பெற்றோரிடம் தங்கியிருப்பார்கள். மனித குழந்தைகள் தனித்து வாழ மாட்டார்கள். பல மிருகங்களின் குழந்தைகளைக் காட்டிலும் மனித குழந்தைகள் மிகவும் பலவீனமானவர்கள். மனைவியை விரும்பாத கணவனும், கணவனை விரும்பாத மனைவியும், இவர்களுக்கு பிறந்த குழந்தையை பொதுவாக விரும்புவார்கள். ஏனெனில் குழந்தைகள் அதிசியங்கள். குழந்தைகளை சம்மனசுகளுக்கு ஒப்பிடுவார்கள்.
இது இன்றைய நம் பார்வைகள். இயேசுவுடைய காலத்தில் குழந்தைகளுக்கு அனைத்து இடங்களிலும் இப்படியான மரியாதை கிடைக்கவில்லை. குழந்தைகள் சமுதாயத்திலே முக்கியமானவர்களாக கருதப்படாதவர்கள். அவர்கள் வளர்ப்பு பிரானிகளுடனே ஒப்பிடப்பட்டார்கள். குழந்தைகளை பொருட்களாகவும் உடமைகளாகவும் கருதினார்கள். இந்த நிலையில்தான் இயேசு இறையரசின் மறைபொருள்கள் குழந்தைகளுக்கு வெளிப்படுத்த்பட்டன என்கிறார் (காண்க மத்தேயு 11,25-27). இந்த வசனம் மூலமாக, அதாவது சமுதாயம் முக்கியமில்லாதவர்கள் என நினைப்பர்களுக்கே அதிக உண்மைகள் தெரிகிறது என சொல்ல வருகிறார். தப்பியோடிய மோசேக்குத்தான் கடவுள் தன் பெயரை வெளிப்படுத்துகிறார் (காண்க விடுதலைப் பயணம் 3,1-15). இயேசு குழந்தைகள் என சொல்லபவர்களை, ஆரம்பகால கிறிஸ்தவர்கள் அல்லது முதல் சீடர்கள் எனலாம்
உண்மையில் குழந்தைகளுக்கு அதிகம் தெரியும். ஏனென்றால் அவர்களுக்கு பொய் தெரியாது. அவர்கள் அன்பில் கலப்படம் இல்லை. அவர்கள் விளையாட்டில் பேராசை இருக்காது. அவர்களின் கோபம் உண்மையானதும், அது சிறிது நேரம் மட்டுமே நிலைக்கும். குழந்தைக்கு நடிக்கத் தெரியாது
இன்றைய உலகம், குழந்தையின் இயற்க்கை தன்மையை மாற்ற முனைகிறது. இது மிக ஆபத்தானது. இதனால்தான் தாய் மடியில் படித்து உறங்கவேண்டிய குழந்தைகள் தங்களைவிட பெரிய புத்தகங்கள் மேல் உறங்குகிறார்கள், கழைத்துப்போய். இருக்கும் அனைத்தையும் 
இயற்கையாகவே பகிரக்கூடியவை குழந்தைகள், ஆனால் இன்று லட்சத்திற்காவும், கோடிக்காகவும், மேடையில் போட்டிபோடுகிறார்கள், தங்கள் பெற்றோரின் பேராசைக்காக. கையில் பொம்பை கேட்கும் குழந்தை இன்று மொபைல் கேட்கிறது
இயேசு பெரியவர்களுக்குதான் போதித்தார், குழந்தைகளை தூக்கி தன் மடியில் வைத்து தடவி, ஆசீர்வதித்தார். குழந்தைகளை குழந்தைகளாக வாழ விடுவோம். அவர்களின் சிரிப்பை களவெடுக்காமல் இருப்போம். அப்போதுதான் நாமும் சிரிக்கலாம், துன்பத்தில். 

மி. ஜெகன்குமார் அமதி
தொடர்பகம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...