வியாழன், 13 ஜூலை, 2017
சொதோம் கொமோராவின் தூசிகள்
இருக்கிறது. விவிலியம்தான் இந்த நகரை உலகிற்கு அறிமுகம் செய்திருக்கிறது. நாற்பத்தி நான்கு தடவைகளாக இந்த நகர்கள் முதல் ஏற்பாட்டில் வருகின்றன. சில ஆய்வாளர்கள் இந்த நகர்கள் தென் சாக்கடலுக்கு அருகில் இருந்திருக்க வேண்டும் என நம்புகிறார்கள். இந்த கானானிய நகர்கள் லோத்தின் தெரிவினால் விவிலியத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன அல்லது லோத்திற்காக முக்கியத்துவம் பெறுகின்றன. ஆபிரகாமின் வேலையாட்களுடன் முரண்படும் லோத் இந்த நகரில் வாழும் பொருட்டு ஆபிரகாமை விட்டு பிரிந்து செல்கிறார். இந்த நகரில் பலவிதமான தீச்செயல்கள் நடைபெற்றதாகவும், கடவுள் இந்த நகரை எரிகற்கள் கொண்டு அழித்ததாகவும் விவிலியம் காட்டுகிறது. ஆக விவிலியத்தின் படி இந்த நகர் பாவத்தின் நகர், இந்த நகரை கடவுள் அழித்தார். இந்த கதையை வாசிக்கின்ற போது, பல நகர்கள் அக்காலத்திலே அழிந்திருக்கின்றன அதனைப் பற்றி விவிலிய ஆசிரியர்களுக்கு நன்கு அறிவிருந்தது என்பதும் தெரிகின்றது. இந்த நாட்களிலே, நாம் சமூக சீரழிவுகள் மற்றும் பாவங்கள் என்று கருதுபவை அக்காலத்திலே வழக்கில் இருந்திருக்கின்றன என்பதும் தெரிகிறது. எது எப்படியாயினும், சொதோம் கொமோரா என்ற நகர்கள் பாவத்தின் அடையாளமாக மாறியிருக்கின்றன அல்லது மாற்றப்பட்டிருக்கிறன. இதனை இயேசுவும் அறிந்திருந்தார் என்பதை இன்றைய நற்செய்தி காட்டுகிறது (காண்க மத்தேயு 10,7-15).
சொதோம் கொமோரா இருந்ததா இருக்கவில்லையா? என்பதையும் தாண்டி, இன்று பல கலாச்சார நகர்கள் இந்த நிலைக்கு மாறிக்கொண்டிருப்பதை காணலாம். ஆரம்ப காலத்தில்
இலக்கியங்களும், பாரம்பரியங்களும், கலாச்சாரங்களும் செழித்து விளங்கிய பல முக்கிய நகர்கள் மெதுவாக அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கின்றன. இதற்கு யார் பொறுப்பு? நகர்கள் என்பது நில அமைப்பு மட்டுமே. ஆனால் நகரின் ஆன்மாகவாக இருப்பது அங்குள்ள மக்கள்தானே? மக்கள்தான் நகரை பழுதாக்கமுடியும், நகர் மக்களை பழுதாக்க முடியாது. இப்படியாக நகர்களை சுத்தப்படுத்த இறைவன் தன் நண்பர்களை அனுப்புகிறார். அவர்களை பணத்திலோ சொத்துக்களிலோ அடைக்கலம் தேடவேண்டாம் என்கிறார். ஆனால் கடவுளின் நண்பர்கள் என்போர், இயேசுவை விட, அவர் வேண்டாம் என்று சொன்னவற்றையே தூக்கிக் கொண்டு திரிகிறார்கள். அன்று பொன், வெள்ளி, செப்பு என்பது இன்று பதவி, படிப்பு, வாகனம் என்று மாறிவிட்டது. இதனை தூக்கிக் கொண்டு திரிவதன் காரணமாக, இயேசுவை தூக்க முடியாமல் இருக்கிறது. இதனால்தான் காலில் ஒட்டியுள்ள தூசிகளையும் தட்டிவிட்டு முன்னேற முடியாமல் இருக்கிறது. அழுக்கு படிந்த தூசி, அழுக்காக தெரியாமல், பெறுமதியாக தெரிவதனால், ஆழக்கோடே வாழ பழகிக்கொண்டனர் இயேசுவின் நண்பர்கள்.
வேலையாட்கள் கூலிக்குரியவர்கள் என்பது மாறி, வேலையாட்கள் எஜமான்களாக மாற முற்பட்டு, அனைவருக்கும் சம்பளம் கொடுக்க பழகிவிட்டார்கள். இதனால் வந்த வேலை மெதுமெதுவாக மறைய, வியாபாரமும் நிறுவன வாழ்க்கையும் பணிவாழ்வாக வரப் பார்க்கிறது.
என்ன செய்ய? லோத்தை வானதூதர் சொதோமைவிட்டு ஓடச் சொன்னார். இயேசு தன் நண்பர்களை நகர் நகராகச் சென்று வாழ்த்துக்கூறி அமைதி சொல்லச் சொல்கிறார். இதற்கு
இடைஞ்சலாக இருப்பவை, அனுப்பியவரையே தட்டிவிடாமல் இருக்க அவதானமாக இருப்போம்.
மி. ஜெகன்குமார் அமதி
வசந்தகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக