திங்கள், 3 ஜூலை, 2017

தூங்கும் தூங்கக்கூடாதவர்

தூங்கும் தூங்கக்கூடாதவர்

எங்களுடைய நவசந்நியாச மடம் பண்டாரவளை என்னும் இலங்கை திருநாட்டின் மலைபிரதேசத்தில் அமைந்திருக்கிறது. அமைதியான சூழல், மலையுச்சு தரும் இதமான குளிர் காலநிலை, வெளிப்பிராக்குகள் இல்லாத மனநிறைவு, இதனால்தான் இங்கே எங்கள் அமதி முன்னோர்கள் நவசந்நியாச மடத்தை (நொவிசியேட்) அமைத்திருக்கிறார்கள். இங்கே. அமதிகள் ஒருவருடம் செலவிட்ட பின்னர் சபையில் சேர்வதா, இல்லையா என்று முடிவெடுப்பார்கள். ஆம் என்கிறவர்களுக்கு, வெள்ளை துறவற அங்கி வழங்கப்பட்டு ஒருவருடம் சபையில் தற்காலிகமாக சேர்கப்படுவார்கள், இல்லை என்கிறவர்கள் தங்கள் உலகத்திற்கு திரும்புவார்கள். இந்த 
இல்லத்தில் தரப்படும் உணவு, செபம் மற்றும் தியான பயிற்சி, விளையாட்டு போன்றவை நல்ல ஆரோக்கியத்தை உருவாக்கும். இந்த ஆரோக்கியத்தின் ஒரு வெளியடையாளமாக நல்ல நித்திரைவரும், அதுவும் சிற்றாலயத்தில் நித்திரைவரும். நித்திரையோடு சோத்து நல்ல ஏச்சும் விழும்
ஒருநாள் திபேரியக் குளத்தின் அலைகள் தாலாட்ட ஆண்டவர் இயேசு நித்திரைகொள்கிறார், படகின் உட்புறத்தில். அவர் முழுமையாக மனிதராகவும் இருந்தாரல்லவா, அதனால் அவருக்கு நித்திரை வரத்தானே வேணும். கடலில் அலை, அதன் இரைச்சல், சாகப்போகிறோம் என்ற பயம், மூழ்கப்போகிறோம் என்ற பரிதவிப்பு. இந்த இயற்கையான மனித உணர்வுகள், கீழே ஆண்டவர் தூங்குகிறார் என்ற ஆன்மீக உணர்வை மறைத்துவிடுகின்றன. பயத்தின் விளைவு கோபம்
இருப்பினும் இவர்களின் கோபம் சற்று அதிகம்தான், ஆண்டவரிடமே செல்லக் கோபம். குழந்தைகள் அப்பாவிடம் காட்டுவது போல. நித்திரையில்தான் மனமும் உடலும் வளர்கிறது என்பதை முதலாம் நூற்றாண்டு அப்பாவி சீடர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் போல
மத்தேயு இந்த சாதாரண நிகழ்வில் இறையியல் செய்கிறார். கடல், தீய சக்திகளின் உறைவிடமாகக் கருதப்பட்டது. கடலின் அலைகள் இந்த சக்திகளின் போராட்டமாகவும் பார்க்கப்பட்டது. இயேசு 'அமைதியாய் இரு' என்று சொன்னது சாதாரண அலையை அல்ல மாறாக தீய சக்திகளை என அழகாக மத்தேயு காட்டுகிறார். அவருடைய அதட்டலைக் கேட்ட கடலும் அமைதியாகிறது. சீடர்களுக்கும் ஏச்சு விழுகிறது. நித்திரையாய் இருப்பவர்களை எழுப்பினால் இதுதான் நடக்கும். அவர்கள் பங்கு சுவாமியாக இருந்தாலும், வீட்டில் தூங்கும் அப்பாவாக இருந்தாலும், சில வேளைகளில் அநியாயமாக அலுவலகத்தில் தூங்கும் உத்தியோகத்தவர்களாக இருந்தாலும், கோபம் வரும் போல. 
கடவுள் தூங்கினாலும், முழித்திருந்தாலும் அவர் கடவுள்தான் என்பது தெரியட்டும்

ஜெகன்குமார் அமதி
அமைதியகம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...