வெள்ளி, 30 ஜூன், 2017
உங்களுக்கு இருக்கா பாதர்,
நேற்றைய தினம், எங்களுக்கு சமையல் செய்கிற அக்கா வேலைக்கு வரவில்லை. அமதியக பிரசங்கிகள் அனைவரும் வெளியில் பணியில் இருக்க நான் மட்டும் தனியே மாட்டிவிட்டேன் வீட்டில். சமைக்க தெரியாது, வேலை அதிகம் அதனால் கடைக்கு சென்று உணவு வாங்க கொஞ்சம் சோம்பல். நேரம் தெரியாமல் வேலை செய்து மாலை நான்கு மணியானது. பசியெடுக்க மேசைக்கு சென்று காலை உணவை பார்த்தேன் அது ஏற்கனவே பழுதாய் போயிருந்தது. என்ன செய்ய யோசித்துக்கொண்டிருந்த வேளை, வேளை வெளியில் சத்தம்...
பாதர், பாதர், பாதர்....
சென்று பார்த்தேன், ஒரு சக்கர நாற்காலியில் வறுமையில் பிடியில் வாடுகின்ற நண்பர் ஒருவர் இருந்தார். உதவி கேட்டார், அது பெரிய உதவி, மனமிருந்தது ஆனால் பணமும் அனுமதியும் இல்லாதிருந்தது. எனவே வீட்டு முதல்வர் சில நாட்களில் வருவார் அன்று வரச்சொன்னேன் கவலையோடு.
அவர் முகத்தைப் பார்த்து சாப்பிட்டீங்களா என்று கேட்டேன், அவர் முழித்தார், அதன் அர்த்தம் இல்லை என்பதாகும். பிஸ்கட் தரட்டா? என்றேன் ஆம் என்றார். நீங்க சாப்பிட்டீங்களா என்றார், இல்லை என்றேன். இருவருக்கும் ஒரே உணர்வு.
உள்ளே சென்று பிஸ்கட் கொண்டுவந்து கொடுத்தேன், அன்போடு வாங்கி பத்திரமாக வைத்தார்.
அவருடைய சக்கர நாற்காலி வண்டியை உருட்ட உதவி செய்தேன், வாசலை மூடும்போது கேட்டார் ஒரு கேள்வி, அது மனதை தொட்டது
பாதர் உங்களுக்கு விஸ்கட் இருக்கா? அத்தோடு பசி மறைந்து போனது.
இன்று நற்செய்தியில் ஆண்டவர் சொன்னது நினைவிற்கு வருகிறது, 'நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!' (மத் 8,3).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக