வெள்ளி, 30 ஜூன், 2017

சாரா ஏன் சிரித்தாய்! Sarah's Laughter!

சனி, 1 ஜூலை, 2017
சாரா ஏன் சிரித்தாய்? 

யூலை மாதம் தொடங்குகின்றது, ஏற்கனவே 2017ம் ஆண்டு அரைவாசி முடிந்துவிட்டது. நமது கனவுகள் நிறைவேறினவா? நாம் எடுத்த முடிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டனவா? என்று சிந்தித்துக்கொண்டு இருக்கும்போதே 2018ம் ஆண்டு எட்டிப் பார்க்கிறது. இந்த மாதத்தையும், பல கனவுகளோடும் திட்டங்களோடு தொடங்குகின்றோம். யூலியஸ் சீசருக்காக இந்த மாதம் உருவானது, இதற்கு முன்னர் இந்த மாதத்தின் பெயர், குயின்டிலிஸ். இந்த மாதம் அமைதியான மாதமாக ஆசீர்வாதங்களையும், வளங்களையும் கொண்டுவர தொடாந்து உற்சாகத்தோடு உழைப்போம்
இன்று திருப்பலி நிறைவேற்றியபோது, வாசங்கள் அதிகமாக மனதோடு பேசின. நிழலிலிருந்த ஆபிரகாம் தெரியாத விருந்தாளிகளை நிழலுக்குள் வரவேற்க வெயிலுக்குள் செல்கிறார். வந்தவர்கள் முதலாளிகளாக, முதலாளி ஆபிரகாம் அவர்களின் பணியாளன் ஆகிறார், என்னவொரு விரும்தோம்பல் (தொ.நூல் 18,1-5). யார் வந்திருக்கின்றா என்ற யன்னல் ஓட்டைகள் மற்றம் கதவு ஓட்டைகள், ஏன் கண்காணிப்பு கருவியூடாக பார்க்கும் காலத்தில் ஆபிரகாமின் விருந்தோம்பல் ஆச்சரியத்தை தருகிறது. ஆண்டவர் தோன்றினார் என்ற ஒருமையில் சொல்லி, பின்னர் மூவர் என்று பன்மையில் சொல்லி, மீண்டுமாக ஆபிரகாம் 'தலைவரே' என்று ஒருமையில் அழைக்கிறார். ஆக வந்தவர்கள் மூவரா அல்லது ஒருவரா? வந்தவர்கள் சும்மா உண்ணவில்லை, சாராவிற்கு குழந்தை பாக்கியத்தையும் கொடுகின்றனர். சாரா இயற்கையின் மகள், இதயத்திலிருந்து சிரிக்கிறாள், கடவுள் கேள்வி கேட்க பயத்தால் 'இல்லை' என்கிறாள். மூளை பொய் சொல்ல இதயம் உண்மை சொல்கிறது. சிறிய வயதில், பாடசாலை நாட்களில், வகுப்பறையில் ஆசிரியரின் தவறைக் கண்டு சிரித்துவிட்டு, அவர் முறைக்க சிரிக்காததுபோல் நடித்தது நினைவிற்கு வருகிறது. இன்னும் சிரிப்புத்தான் வருகிது

மத்தேயு, இயேசுவை குணப்படுத்துகிறவராக காட்டுகிறார். உதவிகேட்கிறவர்கள் யாராகவும் இருக்கலாம். அவர்கள், யூதர் விரும்பாதா உரோமையராக, விரும்பும் தன் நண்பன் பேதுருவின் மாமியாக, தன் சொந்த இன மக்களாகவும் இருக்கலாம், அவர் குணப்படுத்துகிறார். ஆக இவர் சந்தித்து குணப்படுத்தும் ஆண்டவர். யூதர்களாலும் கிறிஸ்தவர்களாலும் வெறுக்கப்பட்ட உரோமையனின் உண்மையான இதய வரி 'ஒரு வார்த்தை சொல்லும் என் பையன் குணமடைவான்' பின்னாட்களில் நம்முடைய நாளாந்த செபமாகிறது. நல்ல முன்னுதாரணம். (மத் 8,5-17).
கதவைத் தட்டும் விருந்தாளியை, எதிர்பார்ப்பில்லாமல் வரவேற்கும், தமிழ் விருந்தோம்பலை வரவேற்க எண்ணுகிறேன்! ஒருவேளை வருகிறவர், ஆண்டவராக, குணப்படுத்துகிறவராக அல்லது சந்திக்காத நண்பராகக்கூட இருக்கலாம். நல்ல நாள் வாழ்த்துக்கள். யூலை வெற்றியளிக்கட்டும்

ஜெகன்குமார் அமதி


உங்களுக்கு இருக்கா பாதர்: Do you have something for you Fr.?


வெள்ளி, 30 ஜூன், 2017

உங்களுக்கு இருக்கா பாதர்


நேற்றைய தினம், எங்களுக்கு சமையல் செய்கிற அக்கா வேலைக்கு வரவில்லை. அமதியக பிரசங்கிகள் அனைவரும் வெளியில் பணியில் இருக்க நான் மட்டும் தனியே மாட்டிவிட்டேன் வீட்டில். சமைக்க தெரியாது, வேலை அதிகம் அதனால் கடைக்கு சென்று உணவு வாங்க கொஞ்சம் சோம்பல். நேரம் தெரியாமல் வேலை செய்து மாலை நான்கு மணியானது. பசியெடுக்க மேசைக்கு சென்று காலை உணவை பார்த்தேன் அது ஏற்கனவே பழுதாய் போயிருந்தது. என்ன செய்ய யோசித்துக்கொண்டிருந்த வேளை, வேளை வெளியில் சத்தம்...

பாதர், பாதர், பாதர்....

சென்று பார்த்தேன், ஒரு சக்கர நாற்காலியில் வறுமையில் பிடியில் வாடுகின்ற நண்பர் ஒருவர் இருந்தார். உதவி கேட்டார், அது பெரிய உதவி, மனமிருந்தது ஆனால் பணமும் அனுமதியும் இல்லாதிருந்தது. எனவே வீட்டு முதல்வர் சில நாட்களில் வருவார் அன்று வரச்சொன்னேன் கவலையோடு

அவர் முகத்தைப் பார்த்து சாப்பிட்டீங்களா என்று கேட்டேன், அவர் முழித்தார், அதன் அர்த்தம் இல்லை என்பதாகும். பிஸ்கட் தரட்டா? என்றேன் ஆம் என்றார். நீங்க சாப்பிட்டீங்களா என்றார், இல்லை என்றேன். இருவருக்கும் ஒரே உணர்வு

உள்ளே சென்று பிஸ்கட் கொண்டுவந்து கொடுத்தேன், அன்போடு வாங்கி பத்திரமாக வைத்தார்
அவருடைய சக்கர நாற்காலி வண்டியை உருட்ட உதவி செய்தேன், வாசலை மூடும்போது கேட்டார் ஒரு கேள்வி, அது மனதை தொட்டது

பாதர் உங்களுக்கு விஸ்கட் இருக்கா? அத்தோடு பசி மறைந்து போனது

இன்று நற்செய்தியில் ஆண்டவர் சொன்னது நினைவிற்கு வருகிறது, 'நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!' (மத் 8,3).  


30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...